உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியா நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடிச்சு ஒரு மிகச்சிறந்த நடிகரா முன்னேறியவர் தான் விக்ரம். சேலத்துல தன்னோட பள்ளி படிப்பை முடித்து பின்னர் சென்னையில தன்னோட கல்லூரி படிப்பை முடிச்சாரு. இளம் வயதில் இருந்தே சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும் ரொம்ப ஆர்வம் கொண்டவரா இருந்துருக்காரு. தன்னோட சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த கால கட்டத்துல தொலைக்காட்சி விளம்பரங்கள்லயும் , சீரியல்களிலும் நடிச்சிட்டு வந்துருக்காரு. வாய்ப்பு கிடைக்காம கஷ்டப்பட்ட காலத்துல அவரு Dubbing Artist -வும் பணியாற்றிருக்காரு. நடிகர் அஜித், அப்பாஸ் மற்றும் பிரபு தேவா போன்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்துருக்காரு. இதனை அடுத்து இவரு நடிச்ச ஒரு விளம்பர படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் இவரை கதாநாயகனா அறிமுகப்படுத்த முன்வராங்க. 1990 ம் ஆண்டு வெளிவந்த என் காதல் கண்மணி படத்தின் மூலம் கதாநாயகனா அறிமுகம் கிடைக்குது.
அதன் பிறகு அவர் நடித்த எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை 1999 ம் ஆண்டு வெளியான சேது படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு விக்ரமிற்கு ஏறுமுகம் தான். அந்நியன் ,சாமி போன்ற பல படங்கள் மூலம் அவர் உச்ச நடிகராக உயர்ந்தார். விடாமுற்சியின் மூலம் உயர்ந்த பெரிய நடிகர் விக்ரம் அப்டினு சொன்ன அதுல ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
Comments
Post a Comment