Top 10 Madhan Karky Songs

 Top 10 Madhan Karky Songs

      தமிழ் சினிமாவுல இருக்க கூடிய மிக முக்கியமான படலாசிரியர்கள்ல மதன் கார்க்கி-யும் ஒருத்தர். இவருடைய பாடல் வரிகளுக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கு அது என்ன அப்டினா நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துறது தான். இவரோட சிறந்த 10 பாடல்களை இப்போ பார்ப்போம்.

Madhan Karky Songs

1. Thooriga ▶️

      GVM-ன் இயக்கத்துல கிட்டார் கம்பி மேலே நின்று Series -ல வந்த பாட்டு தான் "Thooriga". பாடகர் கார்த்திக்ன் இசையில மதன் கார்கி எழுதுன பாட்டு தான் இது. இந்த Thooriga அப்டினு தொடங்குற வார்த்தையே ரசிகர்கள் கிட்ட பெரிய ஆர்வத்தை தூண்டுச்சு.

 2. En Iniya Thanimaiye ▶️

      பொதுவாவே காதல் உணர்வை சொல்ற பாட்டு நிறைய வந்துருக்கும், அதே மாதிரி காதல் தோல்வியை குறிக்கிற பாட்டும் நிறைய வந்துருக்கும் ஆனா தனிமையை விவரிச்சு சொல்ற பாட்டு ரொம்ப குறைவு தான். அந்த வரிசையில வெளிவந்த பாட்டு தான் En Iniya Thanimaiye. தனிமையோட அழகை மதன் கார்கி ரொம்ப அழகா விவரிச்சு சொல்லிருப்பாரு.

3. Nee Korinal ▶️

      180 படத்தில் வெளிவந்த இந்த Nee Korinaal பாடல் ரசிகர்கள் மத்தியில ரொம்ப பிரபலமான பாடல் ஆகும். இந்த பாடல் ஓட இசையும், வரிகளும் திரும்ப திரும்ப கேக்குற வகையில அமைந்திருக்கும்.

4. Idhu Naal ▶️

      GVM ஓட இயக்கத்துல அச்சம் என்பது மடமையடா என்ற படத்துல வெளி வந்த பாட்டு தான் Ethu Naal. AR ரஹ்மான் இசையில் மதன் கார்க்கி எழுதுன இந்த பாட்டு காதல்ல விழுந்த ஒரு இளைஞனை பத்தி சொல்லக்கூடிய பாட்டு. அதுனால ஒரு சராசரி இளைஞன் எல்லாருக்கும் இந்த பாட்டு பொருந்தி போற மாதிரி இருந்துச்சு.

5. Irumbile Oru Irudhaiyam ▶️

      மதன் கார்கி எழுதின பாடல்களிலேயே ரொம்ப வித்தியாசமான பாடல் Irumbile Oru Irudhaiyam பாட்டு. அதுவரைக்கும் மனுஷங்களுக்கு மட்டுமே காதல் வர மாதிரி எழுதுன மதன் கார்கி முதல் முறையா ஒரு Robot -க்கு காதல் வந்தா எப்படி இருக்கும்னு Feel பண்ணி எழுதிருப்பாரு.

6. Alaipaya Alaipaya ▶️

      காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்துல SS தமன் அவர்களோட இசையில வந்த பாட்டு தான் Alaipaya Alaipaya. வழக்கமான காதல் பாடலான இது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

7. Ulaviravu ▶️

      தொடர்ந்து திரைப்படங்களுக்கு மட்டுமே பாடல் எழுதிக்கிட்டு இருந்த மதன் கார்க்கி முதல் முறையா ஒரு Independent Album பாட்டுக்கு வரிகள் எழுதுனாரு. Ulaviravu அப்படின்ற பாடலுக்கு வரிகள் எழுதினாரு. பாடகர் கார்த்திக் முதல் முறையா இசையமைச்ச பாடல் அது. Ulaviravu என்ற வார்த்தையே ரசிகர்கள் மத்தியில பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணுச்சு.

8. Rekkai Mulaithen ▶️

      சுந்தர பாண்டியன் படத்துல இடம் பெற்ற பாட்டு தான் Rekkai Mulaithen. N.R. ரகுநந்தன் இசையில வெளிவந்த இந்த பாட்டை மதன் கார்கி எழுதிருப்பாரு. வழக்கம் போல இந்த பாட்டுல தன்னுடைய எளிமையான வரிகள் மூலமா காதலை வெளிப்படுத்தி இருப்பாரு.

9.Maayava Thooyava ▶️

      இரவின் நிழல் படத்துல AR ரஹ்மான் இசையமைச்சு மதன் கார்க்கி எழுதுன பாட்டு தான் Maayava Thooyava படத்துல வர இந்த குறிப்பிட்ட காட்சி விவரிச்சு சொல்லவே ரொம்ப கஷ்டமான காட்சி But இருந்தாலும் மதன் கார்கி அந்த காட்சியை ரொம்ப அழகா தன்னோட வரிகள்ல வர்ணிச்சு எழுதிருப்பார்

10.Askku Laska ▶️

      மதன் கார்க்கி எழுதுன Askku Laska பாடல் ரொம்பவே வித்தியசமான பாடல் அப்டினு தான் சொல்லியாகணும். பாடல் முழுக்க காதல் என்ற உணர்வுக்கு 17 மொழிகள்ல என்ன வார்த்தையோ அதை கொண்டே ஒரு பாடலை உருவாக்கி இருப்பாரு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைச்ச இந்த பாடல் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துச்சு.


Best Of Madhan Karky SongsHits Of Madhan Karky SongsComments