The Oscars விருதுகளில் இந்தியாவின் பங்களிப்பு

    சினிமா உலகத்தோட மிக பெரிய விருது எது அப்டினா அது கண்டிப்பா Oscar தான். சினிமாவுல இருக்க கூடிய ஒவ்வொரு திரைக் கலைஞனும்  ஜெயிக்கணும் அப்டினு நினைக்க கூடிய Award. இந்த வகையில 95 வது Oscar விருது வழங்கும் விழா Los Angeles நகரில் நடக்க போகுது. இந்த விருதை பத்தின வரலாற்றை தான் நாம்ம இப்போ பாக்க போறோம். Academy Awards அப்டினு அழைக்கப்படுற இந்த Oscar Awards அமெரிக்காவில் இருக்க கூடிய Academy of Motion Picture Arts and Sciences நிறுவனத்தால் வழங்கப்படுது.

      1929 ஆம் ஆண்டு Hollywood Roosevelt Hotel-ல நடந்த தனியார் விருந்தில் Douglas Fairbanks என்ற அமெரிக்க நடிகர் மற்றும் இயக்குனரால் முதலாவது அகாடமி விருதுகள் நடத்தப்பட்டது. Oscar விருதுகள் விழா 1930 இல் வானொலியில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் 1953 இல் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.இது உலகின் மிகப் பழமையான பொழுதுபோக்கு விருது விழாவாகும், இப்போது உலகளவில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.1929 -ல் இருந்து இன்று வரை மொத்தம் 94 Oscar விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ருக்கு. இது வரைக்கும் மொத்தமா 3140 Oscar விருதுகள் வழங்கப்பட்டருக்கு. Oscar விருது விழாவுல மொத்தம் 24 துறைகளுக்கு விருது வழங்கப்படுது. ஒரு Stage வரைக்கும் ஆங்கில படங்களுக்கு மட்டும் தான் Oscar விருது வழங்கப்பட்டுட்டு இருந்துச்சு. 1957 ம் ஆண்டு நடைபெற்ற 29 வது Oscar நிகழ்ச்சியில் தான் முதன் முதலா பிற மொழி படங்களுக்கும் சிறந்த திரைப்படம் விருது வழங்கப்பட்டுச்சு. 2002 இல் நடைபெற்ற 74வது அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் தான் , சிறந்த அனிமேஷன் படத்திற்கான முதல் அகாடமி விருது வழங்கப்பட்டது. 1973 முதல் 2020 வரை, அனைத்து அகாடமி விருது விழாக்களும் சிறந்த படத்திற்கான அகாடமி விருதுடன் முடிப்பதே பாரம்பரியமாக இருந்தது. 2021 ஆம் ஆண்டிற்கான Oscar விருதுகள் சிறந்த நடிகருக்கான விருதுடன் முடித்து அந்த பாரம்பரியம் முதல் முறையாக உடைக்கப்பட்டது. The Academy of Motion Picture Arts and Sciences அமைப்பில் மொத்தம் 7000 -க்கும் மேற்பட்ட வாக்களிக்கும் உறுப்பினர்களை கொண்டது. இந்த 7000 நபர்கள் வாக்களிப்பதன் மூலமாகவே Oscar விருது தேர்வு செய்யப்படுகிறது.

    இதுவரை பல்வேறு இந்தியர்கள் மற்றும் இந்தியர்களின் படைப்புகள் Oscar விருது விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கு. 2021 வருட கணக்கின்படி மொத்தம் 13 இந்தியர்கள் Oscar விருதுக்கு பரிந்த்துரைக்கப்பட்டிருக்காங்க .அதுல 8 இந்தியர்கள் வெற்றிபெற்றுருக்காங்க. 30வது அகாடமி விருதுகளில், மெஹபூப் கானின் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி-மொழித் திரைப்படமான Mother India சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாடமி விருதுகளில் இந்தியாவின் சார்பா Nominate ஆன முதல் படம் ஆகும். இது மற்ற நான்கு படங்களுடன் பரிந்துரைக்கப்பட்டது மற்றும் இத்தாலிய திரைப்படமான நைட்ஸ் ஆஃப் கபிரியாவிடம் (1957) ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.1982 ம் ஆண்டு காந்தி என்ற திரைப்படம் காந்தியின் வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டது. National Film Development Corporation of India -வின் உதவியுடன் தயாரித்து, இயக்குனர் மற்றும் நடிகர் Richard Attenborough -ல் இயக்கப்பட்டது.

    55வது அகாடமி விருதுகளில், காந்தி படத்திற்க்காக ஆடைகளை வடிவமைத்ததற்காக அகாடமி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அப்படத்தின் Bhanu Athaiya பெற்றார்.அதே படத்துக்காக Best Original Score பிரிவில் ரவிசங்கர் பரிந்துரைக்கப்பட்டார்.Best Original Score பிரிவில் Nominate செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை ரவி சங்கர் பெற்றார். 1961 ம் ஆண்டு நடைபெற்ற 33 வது Oscar விருது வழங்கும் விழாவில் Ismail Merchant - ஆல் தயாரிக்கப்பட்ட The Creation of Woman என்ற ஆவணப்படம் ஆஸ்கருக்கு Nominate செய்யப்பட்டது. இந்த படம் தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கார்-க்கு Nominate செய்யப்பட்ட முதல் ஆவணப்படம் ஆகும்.1978 -ம் ஆண்டு Ishu Patel -ன் இயக்கத்தில் வெளிவந்த Bead Game என்ற Animated Short Film தான் இந்தியாவில் இருந்து Nominate செய்யப்பட்ட முதல் Animated Short Filmஆகும். 1989 ம் ஆண்டு வெளிவந்த Salaam Bombay திரைப்படம் 61 வது ஆஸ்கார் விருதுக்கு Nominate செய்யப்பட்டது. 1958 ம் ஆண்டு வெளிவந்த Mother India திரைப்படத்திற்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து ஆஸ்கார்-ருக்கு Nominate செய்யப்பட்ட படம் தான் Salaam Bombay.பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இந்த படம் விருது பெற தவறியது.

    1992 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற பெங்காலி திரைப்படத் ஆளுமையான Satyajit Ray கெளரவ அகாடமி விருதைப் பெற்றார், இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்தியர் இவர் மட்டும் தான். பாலிவுட் திரைப்படமான லகான், 2002 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் விருது பெற தவறியது. 2005 ம் ஆண்டு Ashwin Kumar -ஆல் எழுதி ,இயக்கப்பட்ட Little Terrorist  என்ற Short Film 77 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவுக்கு Nominate  செய்யப்பட்டது. இந்தியாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் குறும்படம் இது தான். அடுத்த படியாக 2009 ம் ஆண்டு வெளிவந்த Slumdog Millionaire படத்துக்காக Best Sound mixing பிரிவில் Resul Pookutty அவர்கள் Oscar  விருதை வென்றார். அதே படத்திற்காக Best Original Score பிரிவில் AR ரஹ்மான் 2 Oscar விருதுகளை வென்றார். ஒன்றுக்கு மேற்பட்ட அகாடமி விருதுகளை வென்ற ஒரே இந்தியர் ரஹ்மான் மட்டுமே. 2019 ம் ஆண்டு நடந்த 91 வது Oscar விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் சார்பில் Nominate செய்யப்பட்ட Period. End of Sentence என்ற ஆவணப்படம் Oscar விருதை பெற்றுள்ளது எல்லாவற்றிற்கும் மேலாக நாம்ம பெருமை படக்கூடிய விசியம் என்ன அப்டினா ஆஸ்கர் கமிட்டியில் இடம்பிடித்த முதல் தமிழ் நடிகர் சூர்யா தான். கடந்த ஜூன் மாதம், அகாடமியின் 2022 ஆம் ஆண்டுக்கான அகாடமியின் கமிட்டிக்கு Member -ஆக அழைக்கப்பட்ட புதிய 397 கலைஞர்களின் பட்டியலை Oscar அகாடமி வெளியிட்டது மற்றும் அதில் சூர்யாவின் பெயரும் இடம் பெற்றது. இப்போது, ​​​​நடிகர் சூர்யா வரவிருக்கும் ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களித்துள்ளார்.கமிட்டியில் உள்ள 7000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கும் ஓட்டுக்களை வைத்தே Oscar விருது அளிக்கப்படுகிறது. தற்போது நடக்கவிருக்கும் 95 வது Oscar விருது விழாவிற்கு The Elephant Whisperers என்ற ஆவணப்படம் Nominate செய்யப்பட்டுள்ளது மற்றும் RRR படத்தில் இடம் பெற்ற Naatu Naatu பாடலுக்காக Best Original Score பிரிவில் M.M. Keeravani Nominate செய்யப்பட்டாரு.

 சமீபத்தில் நடந்த 95 வது Oscar விருது வழங்கும் விழாவில் The Elephant Whisperers என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான Oscar விருதை பெற்றுள்ளது. அதே போல் RRR படத்தில் இடம் பெற்ற Naatu Naatu பாடலும் Best Original Song கிற்கான Oscar விருது மற்றும் பாடல் ஆசிரியருக்கான ஆஸ்கார் என 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது 






Comments