இன்னைக்கு இந்தியா மட்டும் இல்லாம உலகம் முழுக்க பேசப்படக்கூடிய படம்னா அது கண்டிப்பா RRR தான். இந்த RRR படத்துல இடம் பெற்ற Naatu Naatu பாடல் இடம் பெற்று இருந்துச்சு. இந்த RRR படமும் சரி ,Naatu Naatu பாடலும் சரி இந்தியா மட்டும் இல்லமா ஐரோப்பிய நாடுகளிலும் பெரிதளவுல பேசப்பட்டுச்சு. சமீபத்துல நடந்த 95 ஆஸ்கார் விருது வழங்கும் விழாவுல RRR படத்துல இடம் பெற்ற Naatu Naatu பாடல் Best Original song அப்படின்ற பிரிவுல ஆஸ்கார் விருதை கைப்பற்றுச்சு.

       இந்த பாட்டுக்கு இசையமைச்ச M. M. Keeravani அவர்களை பத்தி தான்  நாம்ம இப்போ பாக்க போறோம். ஆந்திராவின் மேற்கு கோதாவரி  மாவட்டத்தில் 1961 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி பிறந்தாரு. இவருடைய இயற்பெயர் Koduri Marakathamani Keeravaani என்பதாகும். இவருடைய தந்தையான சிவசக்தி தத்தா திரைப்பட பாடலாசிரியரும் , திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். Keeravani ராகத்தின் மேல் உள்ள காதலால் தனக்கும் அதே பேர் தன் தந்தை வைத்ததாக பின் நாட்களில் அவர் அளித்த நேர்காணலில் கூறியிருந்தார். தன்னுடைய தந்தை பாடலாசிரியராக இருந்த காரணத்தால் அவருக்கு இயற்கையாகவே இசையின் மீது ஆர்வம் வந்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக இருந்த சக்கரவர்த்தியிடம் உதவியாளராக கீரவாணி சேர்ந்தார். 1990 ம் ஆண்டு கல்கி என்ற படத்திற்கு இசையமைத்தார் ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு Manasu Mamatha என்ற படத்திற்கு இசையமைத்தார் அந்த படம் இசை ரீதியாக அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படமே அவரது இசையில் வெளியான முதல் படம் ஆகும். அந்த அதன் பிறகு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான Kshana Kshanam திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அப்படத்திற்கு இசையமைத்த கீரவாணிக்கு பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு கீரவாணி இசையமைத்த அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கீரவாணி புகழின் உச்சிக்கே சென்றார். அன்றிலிருந்து இன்று வரை கீரவாணி தெலுங்கு சினிமா உலகின் அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். Melody பாடல்களே ரசிகர்களை கவரும் இசை என்று அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.தெலுங்கு மட்டுமின்றி பிற மொழிகளிலும் அவர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1990 ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் அழகன் படத்தின் மூலம் கீரவாணியை தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் இடம் பெற்ற சங்கீத ஸ்வரங்கள் ,சாதி மல்லி பூச்சரமே போன்ற பாடல்கள் மிக பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களால் என்றும் கேட்கப்படுகிறது.

அதன் பிறகு சில ஆண்டுகள் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராக திகழ்ந்தார். அர்ஜுன் நடித்து இயக்கிய சேவகன் படத்திற்கும் அவர் இசையமைத்தார். மலையாளத்தில் அரவிந்தசாமி மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த தேவராகம் படத்திற்கு இசையமைத்தார் அப்படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அந்த படத்தின் பாடல்கள் பெரிதளவில் பேசப்பட்டது.

    தெலுங்கில் அவர் இசையமைத்த நான் ஈ ,மாவீரன் ,பாகுபலி போன்ற படங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. இந்த படங்களின் வெற்றியின் மூலம் தற்கால இளைஞர்கள் மத்தியிலும் கீரவாணி பிரபலமடைந்தார். இதுமட்டுமின்றி இந்தி படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். 1994 ம் ஆண்டு வெளியான criminal திரைப்படத்திற்கு இசையமைத்து இவர் இந்தி உலகில் அறிமுகம் ஆனார். இவர் இசையமைத்து  2002 ம் ஆண்டு வெளியான Sur: The Melody of Life திரைப்படம் கீரவாணியை   இந்தி ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சேர்ந்தது. இதனை அடுத்து அவர் இசையமைத்த அனைத்து இந்தி படங்களின் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றன. இந்தியில் இவர் மொத்தம் 26 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரா இருக்கக்கூடிய SS ராஜமௌலி அவர்களின் உறவினர் தான் M. M. Keeravani.

  ராஜமௌலி அவர்களோட அப்பா விஜயேந்திர பிரசாத் -ம் Keeravani அவர்களோட அப்பா சிவசத்தி தத்தாவும் சகோதரர்கள். 2001 ம் ஆண்டு student No 1 படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆன ராஜமௌலி-ன் வெற்றி பயணத்தில் Keeravani -ன் பங்கு முக்கியமானதாகும். 2015 ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் ராஜமௌலிக்கு மட்டும் இல்ல Keeravani-க்கும் முக்கியமான படமா அமைஞ்சது. பாகுபலி படங்களின் வெற்றி Keeravani-யை சர்வதேச அரங்கில் தெரியப்படுத்தியது. அதன் பிறகு ராஜமௌலி மற்றும் Keeravani இவர்களின் கூட்டணியில் உருவான RRR திரைப்படம் உலகம் முழுக்க வெற்றி நடை போட்டு வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் பாடல்களும் சர்வதேச அளவில் பெரிதும் பேசப்பட்டது. ஐரோப்பிய மக்களும் இந்த பாட்டை கொண்டாட தொடங்கினர். இதனை அடுத்து ஆஸ்கார் விருதுக்கு இந்த பாடல் Best original score என்ற பிரிவில் nominate செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்த 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்த பாடல் ஆஸ்கார் விருதை வெற்றி பெற்றது. Best original score என்ற பிரிவில் M. M. Keeravani ஆஸ்கார் விருதை win பண்ணாரு.Keeravani பத்தின இன்னொரு சுவாரசியமான விசியமும் இருக்கு இசைஞானி இளையராஜா புகழின் உச்சியில் இருந்த காலம் அது அப்போ இயக்குனர் சிகரம் k.பாலசந்தர் அவர்களுக்கும் இளையராஜா -க்கும் சில தனிப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.

   அப்போ k.பாலசந்தர் அவர்கள் இளையராஜாவுக்கு போட்டியா ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தனும் அப்டினு நினைக்குறாரு. அவரு தான் M. M. Keeravani. இந்த மாதிரி விசியங்களுக்கும் இருக்குறதா நம்பப்படுது. விருதுகள் பொறுத்தவரை M. M. Keeravani அவர்கள் பெறாத விருதுகள் இல்லை. Film fare விருதை M. M. Keeravani அவர்கள் இதுவரை 7 முறை வென்றுள்ளார். ஆந்திரா மாநிலத்தின் உயரிய விருதான நந்தி விருதை 11 முறை வென்றுள்ளார். தமிழ்நாடு State விருதை தான் தமிழில் இசையமைத்த முதல் படமான அழகன் திரைப்படத்திற்கு பெற்றார். தற்போது எல்லாவற்றுக்கும் மேலாக Oscar மற்றும் Golden Globe விருதுகளை பெற்றுள்ளார். இதன் பிறகும்      M. M. Keeravani -ன் வெற்றி பயணம் தொடரும் என்பதில் ஆச்சர்யம் இல்லை .

Comments