மகத்தான மங்கையர் - Women's Day Special

    ஆரம்பத்தில் பெண் உரிமை போராட்டம் என்று ஒன்று இருந்ததில்லை, ஏனெனில் சமூக கட்டமைப்பு தோன்றிய காலத்தில் இருந்தே இது ஒரு தாய் வழி சமூகமாகவே இருந்துள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட நிலம் சார்ந்த அரசியல் மாற்றத்தின் காரணமாக பெண்கள் வாரிசு பெறுவதற்கும், குடும்ப அமைப்பிற்க்காக மட்டுமே என்ற தோற்றம் உருவாகி இருந்தது. இப்படியாக பெண் சமூகம் மிக பெரிய அளவில் பின் தங்கி இருந்தது. நூற்றாண்டு கண்ட இந்த பெண்கள் தினத்திற்கு பின்னால் பெரிய வரலாறு உள்ளது. 

Women's Day Special Songs

  18 ம் நூற்றாண்டின் ஆரம்பத்துல உலகின் பல்வேறு பகுதிகள்ல இருந்து பெண்கள் NewYork நகருக்கு குடிபெயர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. அவங்கள்ல பெரும்பாலானோர் தையல் வேலையில ஈடுபட்டிருந்தாங்க. அவங்க பயன்படுத்துற ஊசி, நூல், உட்க்காருற நாற்காலி வரைக்கும் வரி விதிக்கப்பட்டது. மணி கணக்கில் வேலை, குறைந்த ஊதியம் போன்ற பிரச்சனையும் இருந்தது. தொழிலார் போராட்டம் என்பது ஆண்கள் மையப்படுத்தியே இருந்த அந்த காலத்தில், பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக தாங்களே போராட தொடங்கினர். முதல் முறையாக தையல் நிறுவன பெண்கள் போராட தொடங்கினர். இதனை தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் போராட்டம் விரிவடைய தொடங்கியது. இதனை அடுத்து உழைக்கும் பெண்கள் சங்கம் உருவானது. 1908 ம் ஆண்டு குறைந்த வேலை நேரம், உழைப்பிற்கேற்ற சம்பளம்,ஓட்டுரிமை போன்ற அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து 15000 மக்கள் ஒன்று சேர்ந்து NewYork நகரத்தில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு நடுத்தர மற்றும் மேல்தட்டு பெண்களும் இந்த போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். 1917-ம் ஆண்டு முதலாம் உலக போர் நடந்து கொண்டிருக்கும் போது ரஷியாவில் போர் வேண்டாம் அமைதியும்,உணவும் தான் வேண்டும் என்று மார்ச் 8 ம் தேதி பெண்கள் முன்னின்று போராட்டம் நடத்தினர். 4 நாட்கள் நடந்த இந்த போராட்டம் ஆனது ரஷியாவில் இருந்த ஜார் மன்னர் ஆட்சிக்கு முடிவுக்கு வந்தது. பாரதியார் இந்த நிகழ்வை ரொம்ப அற்புதமா சொல்லிருப்பாரு " ஜார் மன்னன் வீழ்ந்தான் ஆஹா வந்தது பார் யுகபுரட்சி " என்று சொல்லப்பட்ட அந்த புரட்சி பெண்களுக்கு ஓட்டுரிமையையும் பெற்று கொடுத்தது. இந்த போராட்டத்தை அடுத்தடுத்த தளத்திற்கு எடுத்து சென்ற பெருமை பெண் போராளி கிளாரா ஜெட்கினை சேரும். அடிப்படையில் கம்யூனிஸ்ட்வாதியான இவர் தான் உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் பெண்கள் தினத்தை முன்மொழிந்தார். 17 நாடுகளில் இருந்து வந்த 100 பெண்களும் கிளாராவை வழிமொழிந்தனர். அதன் பிறகு 1975 ம் ஆண்டு தான் மார்ச் 8 ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. ஐநா பொதுக்குழு. ஒவ்வொரு மகளிர் தினமும் ஒரு முழக்கத்தை முன்வைக்கும். கிட்டத்தட்ட சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடப்படும் இந்த பெண்கள் தினத்தின் நோக்கம் என்னவென்றால் சமூகம்,பொருளாதாரம், அரசியல் ஆகியதுறைகளில் பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவது. இந்த வகையில முதல் மகளிர் தினத்துல முன் வச்ச முழக்கம் என்ன அப்டினா சமுத்துவத்தை யோசி, அறிவுப்பூர்வமாக கட்டியெழுப்பு,மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி என்பதே ஆகும். 

  உலக அளவில் பெரிதும் பேசபட்ட ரஷியா புரட்சிக்கு காரணமாக அமைந்தவர்கள் பெண்கள், அதனால் ரஷியா இந்த மகளிர் தினத்தை ரொம்ப விமர்சையா கொண்டாடுறாங்க நாடு முழுவதும் தேசிய விடுமுறையா அறிவிச்சுருக்காங்க. அந்த மூன்று நாட்களுக்கு பூக்களின் விலை இரட்டிப்பாக உள்ளது. சீனா இந்த மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. இது மாதிரி பல்வேறு உலக நாடுகள் மகளிர் தினத்திற்கு சலுகைகள் அளித்துள்ளது. அரசியல் களத்திலும் உலகம் முழுக்க உள்ள நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு 24 % உள்ளது. உலகிலேயே கியூபா நாட்டில் தான் அதிக பெண் அரசியல் தலைவர்கள் உள்ளனர். இந்திய மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் 78 பேர் பெண்கள் அதாவது14.3 % பேர். மாநிலங்கவையில் 238 இடங்களில் 25 பேர் பெண்கள் தமிழக சட்ட பேரவையில் 234 இடங்களில் 19 பேர் பெண்கள்.எல்லா துறையிலும் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. சுதந்திரத்துக்கு முன்னாடி இருந்தே இந்தியாவுல பெண்களின் எழுச்சி அதிகமாக இருந்தது உதாரணமா சொல்லனும்னா இந்திய அளவில் ஜான்சி ராணி லட்சுமி பாயும்,தமிழக அளவில் சொல்லனும்னா வேலு நாச்சியாரும் சுதந்திர போராட்டத்திற்கு ரொம்பவே உதவியா பாடுபட்டிருக்காங்க. தன் கணவனை கொன்ற வெள்ளையர்களை வேலுநாச்சியார் பழிவாங்குன வீரத்தையும் இந்தியர்கள் அவ்வளவு எளிதில் மறந்துற மாட்டாங்க. ஆண்களுக்கு நிகராக குதிரை ஏற்றம் மற்றும் வாள் வீச்சு போன்ற அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறந்த வீராங்கனையாக திகழ்த்தவங்க ஜான்சி ராணி லட்சுமி பாய். சுதந்திரம் அடைந்த பிறகும் பெண்களின் எழுச்சி அதிகமாகவே இருந்தது, சுதந்திர இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றவர் இந்திராகாந்தி. அரசியல்ல மிக பெரிய ஆளுமையா இருந்த அவங்க பெண்களுக்கு நிர்வாக திறன் இல்ல என்ற கருத்த பொய்யாக்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உழைச்சாங்க. அதே சமயம் தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா அம்மையார் தமிழகத்தின் முதலமைச்சரா இருந்து இந்திய அளவில் மிக பெரிய அரசியல் சக்தியா விளங்கினாங்க.

   மருத்துவ துறையில குறிப்பிட்டு சொல்லனும்னா Anandi Gopal Joshi தான் இந்தியாவின்      முதல் மேற்கத்திய மருத்துவம் படிச்ச பெண் மருத்துவர். 1800-களின் இறுதியிலேயே அமெரிக்காவிற்கு சென்று மருத்துவம் படிச்சாங்க. இந்த விசியம் அந்த கால பெண்களுக்கு மிகப்பெரிய உத்வேகமா இருந்தது.

 மருத்துவ துறையில் சாதிச்ச இன்னொருத்தவங்க தான் டாக்டர் முத்துலட்சுமி இந்தியாவுல புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்குன்னு முதல் மருத்துவமனையை உருவாக்குனது இவங்க தான்.

  இந்தியாவில் தொழில்முறை விமானத்தின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றவர் தான் Durba Banerjee. பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்றவை ஓட்ட தெரியாது என்ற கருத்தை மாற்றி முதல் முறையாக பயணிகள் விமானத்தை இயக்கிய Durba Banerjee-ன் செயல் அன்றைய இந்தியாவில் பரபரப்பாக பேசபட்டது. 

   ஆண்கள் மட்டுமே Billionaire -ஆக இருக்கும் இந்த காலத்தில் ஒரு பெண் Billionaire ஆக உருவாவது மிகவும் கடினம் ஆகும். அந்த வகையில் சுயமாக சம்பாரித்து Billionaire -ஆக உயர்ந்த முதல் பெண் Falguni Nayar ஆவார். இவங்க Nykaa என்ற Makeup சார்ந்த பொருட்களை விற்கும் நிறுவனத்தை நடத்திட்டு வராங்க. இதன் மூலம் இந்தியாவில் சுயமாக சம்பாரிச்சு Billionaire -ஆக உயர்ந்த முதல் பெண் Falguni Nayar தான்.


   கிரிக்கெட் உலகிலும் பெண்கள் சாதிக்க தவறியதில்லை பெண்கள் கிரிக்கெட்டில் அதிக Run சேர்த்த வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் ஆன Mithali Raj ஆவார். ODI, Test, T20 என அனைத்து format -களிலும் சேர்ந்து 10,337 ரன்களை சேர்த்துள்ளார்.

   இப்படி அணைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்ற பாரதியாரின் சொற்களுக்கு இணங்க அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கூறி அவர்களை தள்ளிவைக்காமல் அவர்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதே நம் மனித சமுதாயத்தின் முதல் கடமையாகும்.

Women's Day Special Songs


Comments