உலகத்துல மனித இனம் எவ்வளவு பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் சரி, நகரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் எவ்வளவு மாறினாலும் சரி அன்று தொட்டு இன்று வரைக்கும் மாறாதா ஒரே விசியம்னா அது காதல் மட்டும் தான். இந்த காதலை கொண்டாடுவதற்கென்றே இருக்குற சிறப்பான நாள் தான் காதலர் தினம்.
இந்த காதலர் தினத்தோட வரலாறை பாப்போம். ரோமானிய அரசோட ஆட்சி காலத்துல காதலர் தினம் இருந்தற்கான சாட்சி கூறுகள் இருப்பதா வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுறாங்க. கிளாடிஸ் மீ மீ அப்படின்ற அரசன் ஒரு பெரிய படையை உருவாக்கணும் அப்டினு நினைக்குறாரு. ஆனால் ஆண்கள் எல்லாரும் காதலிப்பதால் யாரும் படையில் சேர வரல. இதனால நாட்டுல யாரும் கல்யாணம் பண்ணிக்க கூடாது அப்டினு ஒரு உத்தரவு போடுறாரு. ஆனால் Valentine அப்படின்ற பாதிரியார் அரசுக்கு தெரியாம நிறையா பேருக்கு திருமணம் நடத்தி வைக்குறாரு.
இதனை அறிஞ்ச அரசர் அந்த பாதிரியார்-ரை சிறையில அடைக்குறாரு. சிறையினுடைய தலைமை காவலருடைய மகள் அஸ்டோரியஸ்-க்கும் அந்த பாதிரியார் Valentine -க்கும் காதல் மலருது. அஸ்டோரியஸ் அவங்க காதலர் Valentine-அ தப்பிக்க வைக்க try பன்றாங்க. இது தெரிஞ்ச உடனே Valentine-க்கு மரண தண்டனை விதிக்கபடுது. அவரு இறப்பதற்கு முன்னாடி நாள் ஒரு Card-ல தன்னோட காதலிக்கு ஒரு Letter அனுப்புறாரு.
அது தான் வரலாற்றுல அனுப்பப்பட்ட முதல் Greeting Card. அடுத்த நாள் Valentine கொலை செய்யபடுறாரு. Valentine ரோம் மக்களோட இதயத்துல நிறைந்து இருந்தாரு. சுமார் 270 வருஷம் கழித்து போப் ஆண்டவர் Valentine-அ புனிதர்-ஆ அறிவிச்சாரு அன்றில் இருந்து Valentine Day காதலர் தினமா கொண்டாடப்படுகிறது.
தமிழ் சினிமாவுல காதலை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துருக்கு, இதுல காதல் மற்றும் காதல் தோல்வி இரண்டையும் ஒண்ணா சேர்ந்து சொன்ன படங்கள்ல முக்கியமான படம் தான் மௌன ராகம், காதல் பட பிரியர்கள் இந்த படத்தை அவ்வளவு எளிதா மறந்துறமாட்டாங்க. அடுத்ததா ஒருதலை காதலை பற்றியும் அதோட வலியை பற்றியும் சொன்ன படங்கள்ல முக்கியமான படம் இதயம், ஷாஜஹான் படம் தான். அடுத்த படியா முதல் காதலோட தாக்கத்தை பத்தி சொன்ன படம் தான் 96. காதலுக்கு முக்கியமே அன்பும், நம்பிக்கையும் தான்.
Valentine's Day Special Compilation
01. Love Songs 2022
02. Love Hits 2021
03. Rhythm of Love - Delight of 90s
04. 80's Love Songs
08. Kadhal 24x7
Comments
Post a Comment