அம்மா - The Iron Lady of Tamil Nadu

    ஜெயலலிதா பிறந்தது கர்நாடகாவில் உள்ள மைசூர் என்றாலும் அவருடைய குடும்பத்திற்கு பூர்விகம் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் தான். ஜெயராம் மற்றும் வேதா தம்பதிக்கு 24 பிப்ரவரி 1948 அன்று பிறந்தவர் தான் ஜெயலலிதா இவரின் இயற்பெயர் கோமளவல்லி. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே மிகவும் திறமையான மாணவியாக இருந்துவந்தார் இசை மற்றும் நாடகத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு தயாராகும் நேரத்தில் தான் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. கன்னட படங்களில் நடிகையாக அறிமுகம் ஆனார்.  தமிழில் வெண்ணிறாடை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் .அதன் பிறகு MGR உடன் சேர்ந்து 28 படங்கள் நடித்தார். இவர்களின் ஜோடி பெருமளவில் பேசப்பட்டது. கதாநாயகியாக மொத்தம் 140  படங்களில் நடித்தார் அதன் பிறகு எழுத்து மற்றும் பத்திரிகை துறையில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதாவை MGR அவர்கள் அரசியலுக்கு அழைத்தார், அவரை சத்துணவு திட்டத்தின் உயர்மட்ட குழுவின் உறுப்பினராக நியமித்தார். 

Jayalalitha

   அதன் பிறகு அதிமுக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கபட்டார். கொள்கை பரப்பு செயலாளர் ஆக நியமிக்கப்பட்ட பின்பு அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறிப்போனார் ஜெயலலிதா. MGR-ன் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா கட்சியை தலைமை ஏற்று நடத்தினார். தமிழகத்தின் முதல் பெண் எதிர் கட்சி தலைவரும் இவர் தான். 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார். MGR மறைவிற்கு பின்பு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்ற கருத்தை பொய்யாக்கி அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் ஜெயலலிதா. 1 ரூபாய் சம்பளம் போதும் என்று கூறி, புழக்கத்தில் இருந்த மலிவு விலை மதுவுக்கு தடை விதித்து பணியை தொடங்கினார் ஜெயலலிதா. பின் மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார், காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தார், தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார். அதன் பிறகு நிறைய விமர்ச்சனைகளையும், சோதனைகளையும் சந்தித்தாலும் மிகவும் தைரியமாக நின்று அனைத்தையும் எதிர்த்து போராடினார்.

Jayalalitha

   திமுகவின் மீதும் பல்வேறு குற்றசாட்டுகள் இருந்த போதும் 2011 சட்டமன்ற தேர்தல் வந்தது. தேர்தலில் வெற்றி பெற பெரிய கூட்டணி தேவைப்படும் என்று புரிந்து கொண்ட ஜெயலலிதா, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மற்றும் இடது சாரி கட்சிகளை தனது கூட்டணியில் சேர்த்து கொண்டார். அந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அதன் பிறகு அம்மா உணவகம், அம்மா குடிநீர் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார். காமராஜர், MGR, கருணாநிதி வரிசையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த முதல்வர் என்ற பெயரை பெற்றார். அதன் பிறகு  ஜெயலலிதாவின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது . 

Jayalalitha

   நாளைய பாரத பிரதமர் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இப்படி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் தடைக்கல்லாக வந்தது  ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு. மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட அவருக்கு தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை தரப்பட்டது,  இறுதியில் சிகிச்சை பலனின்றி  ஜெயலலிதா காலமானார். வாழ்க்கையில்  பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றி பெற்ற ஜெயலலிதா தமிழகத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தார், பல தடைகளை கடந்து இந்தியாவில் பெரிய ஆளுமையாக உருவெடுத்த ஜெயலலிதா பெண் குலத்திற்கே ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினால் அது மிகையாகாது.




Comments