காதல் படம்னாலே மணிரத்னம் தான் அப்டினு பேச்சு போயிட்டு இருந்த காலம் அது. அப்போ 2001 ம் ஆண்டு வெளிவந்த மின்னலே படத்தின் மூலமா இயக்குநரா அறிமுகம் ஆனவர் தான் கெளதம் வாசுதேவ் மேனன். மின்னலே படம் வெளியாகி பெரிய வெற்றியடைஞ்சது காதல் திரைப்பட வரிசையில ஒரு புது அத்தியாதத்தையே உருவாக்குச்சு. இந்த படத்தோட பாடல்கள் மக்களால் இன்னும் கேட்கப்படுது.
அடுத்து அவரோட இயக்கத்துல வெளிவந்த படம் தான் காக்க காக்க வித்தியாசமா Police கதையை மையமா வச்சு எடுக்கப்பட்ட படம். காதல் காட்சிகள் மற்றும் வித்தியாசமான திரைக்கதையின் மூலமா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அடுதது அவரோட இயக்கத்துல வெளிவந்த படம் தான் வாரணம் ஆயிரம் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்துல வெளிவந்த சிறந்த படங்கள்ல ஒண்ணுனு தான் சொல்லணும். இரட்டை வேடத்துல தோன்றி நடிச்ச சூர்யா மற்றும் அருமையான திரைக்கதையின் மூலமா படம் பெரிய வெற்றி பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் ஓட இசை இந்த படத்துல பெரிதும் பேசப்பட்டது.
அடுத்து வெளிவந்த படம் தான் விண்ணை தாண்டி வருவாயா. சினிமா ரசிகர்களும் சரி,காதலர்களும் சரி இந்த படத்தை அவ்வளவு எளிதில் மறந்துறமாட்டாங்க. படத்தோட கதையும்AR ரஹ்மான் ஓட இசையும் சேர்ந்து VTV படம் ஒரு அருமையா காதல் காவியமா உருவாச்சு. VTV படத்துல சிம்பு ஒரு கதாநாயகன் அப்டினா AR ரஹ்மான் இன்னொரு கதாநாயகன் அப்டினு தான் சொல்லியாகணும் ஏன்னா அந்த அளவு ரஹ்மான் அவர்களோட இசை முக்கியத்துவம் பெற்றுச்சு. ரொம்ப எளிமையா சொல்லனும்னா VTV நவீன கால காதல் கதைகளுக்கு ஒரு புது இலக்கணத்தையே உருவாக்குச்சுன்னு தான் சொல்லணும். இப்படி தொடர்ந்து பல நல்ல படங்கள் பண்ணி இன்னைக்கு தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத இயக்குநரா கெளதம் வாசுதேவ் மேனன் உருவெடுத்துருக்காரு.
Comments
Post a Comment