சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை சிவகார்த்திகேயன்

      சினிமாவில் கால் பதிக்க வேண்டுமென்றால் திரை பிரபலங்களின் வாரிசாக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த நிலையை மாற்றி  திறமையும், நம்பிக்கையும் இருந்தால் போதும் ஒரு சாதாரண நடுத்தர வர்கத்தை சேர்ந்த இளைஞனும் சினிமாவில் சாதிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவாகார்த்திகேயன். சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவருக்கு கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே பலகுரலில் பேசுவதில் வல்லவர். இவரது திறமையை பார்த்த நண்பர்கள் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்க Encourage செய்தனர்.

Sivakarthikeyan Songs

    அந்த போட்டியில் வென்று அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகும் வாய்ப்பையும் பெற்றார். இவரது Comedy கலந்த நிகழ்ச்சி தொகுப்பு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொடுத்தது. இவரது நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் விதத்தை பார்த்த  இயக்குனர் பாண்டியராஜ் தான் இயக்கும் அடுத்த படத்தில்  சிவகார்த்திகேயனை நாயகனாக அறிமுகம் செய்தார். அதற்கு பிறகு சினிமாவில் தொட்டதெல்லாம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியாய் மாறி போனது. அதற்கு பிறகு அவர் நடித்த எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் வெற்றியடைந்து சிவகார்த்திகேயன் அவர்களை ஒரு முன்னனி Hero-வாக மாற்றியது.

Sivakarthikeyan Songs

    தொடர்ந்து Comedy படங்கள்லயே நடிச்சிட்டு இருந்த சிவகார்த்திகேயன் அடுத்து Action படங்கள்ல களமிறங்குனாரு, தன்னோட அப்பா ஒரு காவல்துறை அதிகாரி அப்படிங்கிறதுனால காக்கிசட்டை படத்துல ஒரு காவல்துறை அதிகாரியா நடிச்சுருப்பாரு. அடுத்து சீமராஜா என்ற வித்தியாசமான Comedy  கலந்த  Emotional படத்துல நடிச்சுருப்பாரு.  Family Audience-அ ஈர்க்குற விதமா நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்துல நடிச்சுருப்பாரு.

Sivakarthikeyan Songs

    அதன் பிறகு அவர் நடித்த Doctor, Don போன்ற படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்த வெற்றிகள் வியாபார ரீதியாக சிவகார்த்திகேயனுக்கு மிக பெரிய இடத்தை பெற்று தந்தது. அடுத்து இவர் நடித்து வெளியாக இருக்கும் படங்களான மாவீரன், அயலான் போன்ற படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக உருவெடுத்துள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று மிக பெரிய Mass ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் பல இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறினால் அது மிகையாகாது.


Sivakarthikeyan Songs

SK HitsKaaki Sattai Songs

Namma Veettu Pillai SongsSeemaraja Songs

Comments