பிள்ளையார் ஒரு சுபமான மதியம் உச்சி வெய்யில் நேரத்தில் பிறந்தார் என்பது ஐதீகம் என்பதால் அந்நேரத்தில் அவருக்கு பூக்கள், இனிப்புகள், வாழை ஆகியவை படைக்க படுவது வழக்கம். கொழுக்கட்டை என்றால் அவருக்கு உயிர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆங்கில மாதங்களில் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் விநாயக சதூர்த்தி கொண்டாடுவது வழக்கம். தீபாவளியை அடுத்து இந்த பண்டிகைதான் ஹிந்துக்களால் அதிகம் அனுசரிக்கப்படுவதும் உண்மை. தடைகளை நீக்கி போடுவதில் வல்லவர் யானைமுகன் என்பதா சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடித்தமான இஷ்ட தெய்வம் அவர் தான்.
கணேச காயத்திரி மந்திரம்:
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
நந்தோ தந்தி ப்ரசோதயாத்’
பத்து நாட்கள் வீட்டில் வைத்து வணங்கப்படும் பிள்ளையார் சிலைகள் பின்னர் ஆனந்த சதுர்தசி அன்று நீரில் கரைக்கப்படுகின்றன. அவரவர் வாழும் பகுதிகளுக்கேற்ப ஆறுகளிலோ, குலங்களிலோ அல்லது கடலிலோ கரைக்க படுகின்றன. ஒரு நம்பிக்கை சொல்கிறது நீரில் கரையும் விநாயகர் அவர் தாய் தந்தை பார்வதி சிவனிடம் சென்று சேர்கிறார் என்று. இன்னொரு நம்பிக்கை சிலைகள் வடிக்கப்படுவதும் பின் கரைக்க படுவதும் பிறப்பு இறப்பு மற்றும் பழையது புதுப்பிக்க படுவதை குறிக்கிறதென்று.
பிள்ளையாரின் கதைகளும் நம்பிக்கைகளும் இந்தியா முழுக்க வெவேறாக இருந்தாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சந்தோஷமும் புது நம்பிக்கையும் கொடுப்பது இந்த நாள். அதுவும் இந்த கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து நிற்கும்பொழுது அதிலிருந்து மீள நமக்கு விநாயகர் துணை நிற்பர் என்பதே நிஜம்.
Vegus168 ทางเข้า แทงบอล คาสิโน บอลออนไลน์ บาคาร่าออนไลน์ เครดิตฟรี เว็บตรง สมัครง่าย
ReplyDelete